இதய ஏட்டினில் அன்பென்னும்
மையினால் எழுதப் பட்டது இந்த எழுத்து மடல்.
என் தலைவனின் சந்தனப் பாதங்களுக்கு
நான் சமர்ப்பிக்கும் பாசமலர் அர்ச்சனை.
புரட்சித் தலைவரின் புகழும்
பெருமையும் காற்றில் அலையாது, தண்ணீரில்
கரையாது, பூமிக்குள் ஓடாது, நெருப்பில் எரியாது, வானத்தில் மறையாது.
ஏனென்றால், அது பஞ்சபூதங்களையும் தனக்குள் அடக்கிய மாபெரும் சக்திக்
கோளம்.
என் குழந்தைப் பருவம் அற்புதமானது.
மக்கள் திலகத்தின் படங்களை
மட்டுமே திரையரங்குளில் மெய் மறந்து பார்த்து, வீரமும், விவேகமும் நிறைந்த அவரின் வசனங்களில் வாழ்க்கையைக் கற்று, கருத்தும், கண்ணியமும் இழைத்து அவர் பாடிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்து
வளர்ந்தேன்.
அதனால்தான் அறிவுள்ளவளாக - மனதில் நல்லெண்ணமும் - செயலில் துணிச்சலும் தைரியமும் - குணத்தில் மாண்பும் - பண்பில் மனிதாபிமானமும் நிறைந்தவளாக எல்லோருக்கும் பிடித்தவளாக
இத்ந விநாடி வரை என் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வலைப்வூவில் நான் எழுதுவது தலைவரின் படங்களை பற்றின விமர்சனமோ, விவரிப்போ கிடையாது, நான் பார்த்து என் கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்த பிரமிக்க
வைத்த காட்சிகளின் சின்ன தொகுப்பு மட்டுமே. தலைவரின் நடிப்பு திறனை பற்றி தனி புத்தகம் எழுதுவதே எனது அடுத்த லட்சியம்.
No comments:
Post a Comment